மாநில செய்திகள்
மின் கட்டணம், ஜி.எஸ்.டி. உயர்வை கண்டித்து 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் - தே.மு.தி.க. அறிவிப்பு
மாநில செய்திகள்

மின் கட்டணம், ஜி.எஸ்.டி. உயர்வை கண்டித்து 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் - தே.மு.தி.க. அறிவிப்பு

தினத்தந்தி
|
21 July 2022 6:54 PM IST

தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு வரும் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தே.மு.தி.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மின் கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் வருகின்ற 27-ம் தேதி காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்